
நடந்து முடிந்த மாநில தேர்தலில் இந்திய சமூகத்தை சேர்ந்த பெரும்பாலோர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைச் சேர்ந்த பக்காத்தான ஹராப்பான் – தேசிய முன்னணி கூட்டணிக்கு வாக்களித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்துவிட்டு அனைவரும் ஒன்றுபட்டு மடானி அரசாங்கத்தற்கு ஆதரவு வழங்க வேண்டும் என இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் புரட்சி இயக்கத்தின் தலைவரான சிதார்த்தா கேட்டுக்கொண்டார்.
மேலும் துணைப்பிரதமர் பதவியிலிருந்தும் அம்னோவின் தலைவர் பதவியிலிருந்தும் டத்தோ அகமட் ஸாஹிட் ஹமிடி பதவி விலக வேண்டும் என சில தரப்பினர் கோரிக்கை விடுப்பது நியாயமில்லை என சிதார்த்தா வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு அம்னோவும் சபா மற்றும் சரவாவைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் பெரும் பங்காற்றின.
அரசியல் நிலைத்தன்மையுடன் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையிலும் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அரசியல் வேற்றுமையும் கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும் இந்திய சமூகத்தில் ஒன்றுமைத்தான் மிகவும் முக்கியம். ஒன்றுமையுடன் இணைந்து போராடினால் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெறமுடியும் என சிதார்த்தா கேட்டும் கொண்டார் .