
கோலாலம்பூர், மார்ச் 31 – சிலாங்கூர், செர்டாங் (MAEPS ) – சில் தாம் கலந்துகொள்ளவிருந்த நோன்பு துறப்பு நிகழ்வை விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு ரத்துச் செய்துள்ளதாக கூறப்படுவதை அதன் அமைச்சர் Mohamad Sabu மறுத்துள்ளார். ஏப்ரல் 9அம் தேதி நடைபெறவிருந்த அந்த நிகழ்வை விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு ரத்துச் செய்துவிட்டதாக கெடா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ Mohamad Sanusi Mohamad Nor கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டு அபத்தமாக இருப்பதாக முகமட் சாபு தெரிவித்தார். அந்த நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அதன் நிர்வாகத்திடம் எழுத்துப் பூர்வமான அனுமதி எதனையும் அதன் ஏற்பாட்டாளர்களிடம் பெறவில்லை. MAEPS விவசாய கண்காட்சி மையம் MARDI யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விவகாரத்தில் கெடா மந்திரிபுசார் தமது அமைச்சை குறைகூறுவதில் நியாயம் இல்லையென முகமட் சாபு தெரிவித்தார்.