
New Delhi, அக் 13 – இந்தியா, சென்னையில், மானும், குரங்கும் நட்பு பாராட்டும் காணொளி கவனத்தை ஈர்த்து வருகிறது. அவ்விரு விலங்குகளும், தங்களுக்கு இடையிலான நட்பை வெளிப்படுத்தும் விதம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள, சென்னை இந்திய தொழில்நுட்ப கழக கல்லூரியில் அந்த காணொளி ஒளிப்பதிவுச் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதில், மான் மீது அமர்ந்தவாறு, கல்லூரி வளாகத்தை குரங்கு வலம் வருவதை காண முடிகிறது. அவ்விரு விலங்குகளும், புதர், தண்ணீர் குழாய் என சுற்றித் திரியும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.