கோலாலம்பூர், ஆகஸ்ட் -25, Colours Of India, மலேசியச் சாதனைப் புத்தகத்தில் நான்காவது முறையாக இடம் பெற்றுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் உள்ளரங்கு தீபாவளிச் சந்தை என்ற புதியச் சானையை அது படைத்துள்ளது.
சனிக்கிழமையன்று 217 விற்பனைக் கூடாரங்களுடன் (booth) அச்சாதனைப் படைக்கப்பட்டது.
ஜோகூர் பாரு, சுத்தரா மால் பேரங்காடியில் ஆகஸ்ட் 23 தொடங்கி செப்டம்பர் 1 வரை நடைபெறும் தென்கிழக்காசிய தீபாவளி திருவிழா மற்றும் விற்பனைக் கண்காட்சியில் Colours of India தீபாவளிச் சந்தை அச்சாதனையை எட்டியது.
இப்புதிய மைல் கல்லை அடைந்ததில், விசுவாசமான followers-கள், விற்பனை நிறுவனங்கள் (vendors) நிகழ்ச்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்பு இன்றிமையாததாகும்.
எனவே அச்சாதனையைக் கொண்டாடும் விதமாக, விற்பனைத் தளத்தின் நான்காவது மாடியிலுள்ள மேடைப் பகுதியில் புகைப்படமெடுக்கும் சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விற்பனை நேரம் முடிந்ததும் அதாவது இரவு 10.30 மணியிலிருந்து 11 மணி வரை அங்கு குழுப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
அதற்கு, ஒவ்வோர் கூடாரமும் ஒரு பிரதிநிதியை அனுப்புமாறும் Colours Of India கேட்டுக் கொண்டது.