காபுல், பிப் 22- ஆப்கானிஸ்தானுக்காக மாபெரும் ராணுவத்தை உருவாக்கும் இலக்கை கொண்டிருப்பதாக தலிபான்கள் கூறியுள்ளனர். இதற்கு முந்தைய அரசாங்கத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் துருப்புக்களும் ராணுவ உருமாற்ற நடடிக்கையில் இடம்பெற்றிருப்பார்கள் என தலிபான் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான Latifullah Hakimiதெரிவித்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்க படைகள் நாட்டிலிருந்து வெளியேறியபோது ஏற்பட்ட குழப்பத்தின்போது அமெரிக்க படைகள் விட்டுச் சென்ற 81 பழுதடைந்த ஹெலிகாப்டர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பழுதுபார்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.