
கோலாலம்பூர் மே 16- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமது ஆசிரியர் தின வாழ்த்துக்களை மனிதவள அமைச்சர் வி .சிவகுமார் தெரிவித்துக் கொண்டார். இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர். இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும்.
ஆசிரியர்கள் செய்துவரும் சேவை மகத்தானது. மேலும் ஆசிரியப் பணி என்பது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியாகும். மாணவர்கள் தங்கு தடையின்றி தரமான கல்வியை பெறுவதற்கு ஆசிரியர்கள் தங்களது கடமையை முறையாக செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் அவ்வப்போது நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பணியை திறம்படச் செய்ய வேண்டும் என இன்றைய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளிட்ட வாழ்த்துச் செய்தியில் சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.