Latestமலேசியா

மாமன்னரின் ஒப்புதல் இல்லாமல் பெறப்படும் வெளிநாட்டு விருதுகளும் பட்டங்களும் பதக்கங்களும் இங்கே செல்லுபடியாகாது

கோலாலம்பூர், மே-13, மாட்சிமைத் தங்கிய மாமன்னரின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்துப் பெறப்படும் கௌரவ விருதுகளும் பட்டங்களும் பதக்கங்களும் இந்நாட்டில் செல்லுபடியாகாது.

கௌரவ விருதுகள் தொடர்பான குற்றங்களுக்கான 2017 சட்டத்தின் கீழ் அது தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதாக, மலேசிய Datuk Dato’ மன்றத்தின் தலைவர் Datuk Awalan Abdul Aziz கூறியுள்ளார்.

அதே சமயம், இந்நாட்டு குடிமகன்களுக்கு மாமன்னர், சுல்தான்கள் மற்றும் மாநில கவர்னர்கள் மட்டுமே சட்டப்பூர்வமான விருதுகளும் பட்டங்களும் வழங்க முடியும் என்றார் அவர்.

கௌரவ விருதுகளும் பட்டங்களும் தவறாகப் பயன்படுத்தப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருவது குறித்து கேட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.

அக்கலாச்சாரத்தோடு, மாமன்னரின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்துப் பெறப்பட்ட விருதுகளையும் பட்டங்களையும் இங்கே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ளும் பழக்கமும்  முறியடிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட சட்டம் 2018-ஆம் ஆண்டே  அரசு பதிவேட்டில் இடம் பெற்று விட்ட போதிலும், அது இன்னும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை.

அதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு முக்கியம் என Datuk Awalan சொன்னார்.

அச்சட்டத்தின் கீழ் தவறிழைப்போருக்கு, குற்றத்தின் கடுமையைப் பொருத்து  500,000 ரிங்கிட் வரையில் அபராதமும் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!