Latestமலேசியா

மாமன்னரின் பெயரைப் பயன்படுத்தி போலிச் செய்தி – விசாரணையைத் தொடக்கியது போலீஸ்!

கோலாலம்பூர், அக் 6 – மாட்சிமைத் தங்கிய மாமன்னர் மற்றும் இஸ்தானா நெகாராவின் படங்களையும் பெயர்களையும் பயன்படுத்தி, போலிச் செய்திகளைப் பரப்பியிருக்கும் நபர்களை அடையாளம் காண, போலீசார் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

பொறுப்பற்ற நபர்கள், மாமன்னரின் பெயரையும் அரண்மனையின் பெயரையும் பயன்படுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டிருப்பது தொடர்பில் தங்களுக்குப் புகார் கிடைத்திருப்பதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் துணை இயக்குனர் ஏசிபி மியோர் ஃபாரிடாலாத்ராஷ் வாஹிட் (Mior Faridalathrash Wahid) தெரிவித்தார்.

இப்புகார் மீதான விசாரணை அறிக்கையைப் பூர்த்திச் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தங்களின் அரசியல் இலாபத்துக்காகவும், சுயநலனுக்காகவும், சிலர் இத்தகைய போலிச் செய்திகளைப் பரப்பியிருப்பதைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதாக அரண்மனையின் தலைமைக் காப்பாளர் டத்தோ அகமட் ஃபாடில் ஷாம்சுடின் (Datuk Ahmad Fadil Shamsuddin) நேற்று அறிவித்திருந்தார்.

இதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்யவும் தயங்க மாட்டோம் என அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!