
கோலாலம்பூர், செப் 30 – வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மாற்றங்களை கொண்டு வருவதில் மாமாக் உணவகங்களை அடித்துக் கொள்ள முடியாது. 24 மணி நேர உணவுச் சேவை, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பணம் செலுத்தும் முறை, காற்பந்து விளையாட்டை பார்க்கும் பெரிய திரைகள் என வாடிக்கையாளர்கள் கவரும் வண்ணம் எளிய முறையில் வசதிகளை ஏற்பாடு செய்து விடுவார்கள்.
அந்த வரிசையில் அடுத்ததாக, ‘ATM’ இயந்திரத்தையே தன் கடையின் வளாகத்தில் பொறுத்தியுள்ளது மாமாக் உணவகம் ஒன்று. அனைத்துமே டிஜிட்டல் வசமாகிவிட்ட இக்காலத்தில், நம்மில் பெரும்பாலோர் கையில் பண நோட்டுகளை வைத்திருப்பதில்லை, சில சமயம் ‘ATM’ இயந்திரதிற்குச் சென்று பணம் எடுக்க மறந்துவிடுகிறோம். இப்படி இருக்க, கவலை வேண்டாம் எங்களிடம் அந்த சேவையும் இருக்கிறது என்பது போல அமைந்துவிட்டது இந்த மாமாக் உணவகத்தில் ‘ATM’ இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ள விவகாரம்.
இந்த இயந்திரம் எந்த உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியாத நிலையில், இச்செய்தி வலைத்தளவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.