
திரங்கானு, மாராங்கிலுள்ள, சில கடற்கரை பகுதிகளில் நச்சு தன்மையுடைய கடல்வாழ் உயிரினமான ஜெல்லிமீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக, கெகாபு தீவின் கடற்கரைப் பகுதியில், காலை மணி 10.30 வாக்கில், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஜெல்லிமீன்களை கண்டதாக, மாராங் மாவட்ட APM மலேசிய பொது தற்காப்பு படை அதிகாரி லெப்டனன் முஹாஜிட் அப்துல் வாஹாப் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஏழு ஜெல்லிமீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, புதைக்கப்பட்டன.
அச்சம்பவத்தை அடுத்து, ஜெல்லிமீன்களை அடையாளம் காண கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் வேளை ; அவற்றை கண்டால் உடனடியாக கடற்கரை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஜெல்லிமீன்கள் நச்சுத்தன்மை உடையவை என்பதால், அவற்றை தொடவோ, பிடிக்கவோ வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.