மாராங், ஏப்ரல் 30 – திரங்கானு, மாராங், ஜாலான் குவாலா திரங்கானு – குவந்தான் சாலையில், விரைவுப் பேருந்தையும், மோட்டார் சைக்கிளையும் உட்படுத்திய விபத்தில், இரு நண்பர்கள், சம்பவ இடத்திலேயே பறிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை மணி 1.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததை, மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் முஹமட் ரஹ்மான் செதாப்பா உறுதிப்படுத்தினார்.
குவந்தானிலிருந்து குவாலா திரங்கானு நோக்கி பயணமான விரைவுப் பேருந்தை, மேடான் சாலை சந்திப்பிலிருந்து மாரான் நகரை நோக்கி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவ்விபத்தில், மோட்டார் சைக்கிளோட்டியான 21 வயது ஆடவரும், அவரது பின்னால் அமர்ந்து சென்ற 18 வயது பெண்ணும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
எனினும், பேருந்து ஓட்டுனருக்கும், அதில் இருந்த பயணிகளுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.