கோலாலம்பூர், பிப் 18 – மாராவின் 5 அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை தற்போது 99 விழுக்காடு முடிந்துவிட்டதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை தலைமை ஆணையர் Ahmad Khusairi Yahaya
கூறினார்.
விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக MACC யின் சட்டப் பிரிவு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 5 அதிகாரிகள் மீதான விசாரணையைத் தவிர்த்து Mara Corparation நிறுவனத்தின் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறான பயன்படுத்தியது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Ahmad Khusairi Yahaya கூறினார்.