
அலோர் காஜா, நவ 21 – மலாக்கா, மஸ்ஜிட் தானாவில் மாரா உயர் தொழில்திறன் கல்லூரியின் தங்கும் விடுதியைச் சேர்ந்த மாணவர்களிடையே நிகழ்ந்த கைகலப்பில் முதலாவது செமஸ்டார் மாணவர் ஒருவர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அலோர் காஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மலாக்கா மாநில கல்வி, உயர்க்கல்வி மற்றும் சமய விவகாரங்கள் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் இதனை தெரிவித்தார்.
இதன் தொடர்பில் மஸ்ஜிட் தானாவிலுள்ள மாரா உயர்தொழில் திறன் கல்லூரியின் நிர்வாகம் விசாரைணை மேற்கொண்டு வருவதோடு இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ரஹ்மாட் கூறினார். அந்த தகராறுக்கு மாணவர்கள் காரணமாக இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.