கோலாலம்பூர். பிப் 7 – MARA வின் ஐந்து உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தும்பொருட்டு அதன் தலைமையகத்திலுள்ள அலுவலகங்களில் MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி சோதனை நடத்தியது. இன்று காலை மணி 10.30 அளவில் Jalan Tuanku Abdul Rahman னிலுள்ள Menara Mara வில் சில MACC அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். அவர்கள் ஆவணங்களை தேடியதோடு மாரா தலைமையகத்திலுள்ள சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது. மாராவுடன் தொடர்புடைய இதர இரண்டு கட்டிடங்களிலும் அவர்கள் உள்ளே புகுந்தனர். அத்திட்டம் தொடர்பில் பின் தேதியிடப்பட்ட தொகையில் ஐந்து மாரா அதிகாரிகள் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் MACC விசாரணையை தொடங்கியுள்ளது.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்14 hours ago