கோலாலம்பூர், பிப் 7 – 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அல்லது சினோவெக் தடுப்பூசி போட்டுக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், மார்ச் முதலாம் தேதிக்கு முன்னதாகவே, பூஸ்ட்ர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறும்போது , மார்ச் முதலாம் தேதியிலிருந்து , மைசெஜாத்ரா செயலியில் அவர்கள் முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டிருக்கவில்லை எனக் காட்டும்.
எனவே, இன்னும் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்கள் குறிப்பாக முதியவர்கள் நாடு முழுவதுமுள்ள தடுப்பூசி மையங்களில் walk in முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென, இன்று மாலை மணி 5 -க்கு நேரலையாக ஒளியேறிய செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.