Latestமலேசியா

மார்ச் 1-இல் நாட்டின் எல்லையைத் திறக்க உத்தேசம் ; டான் ஶ்ரீ முஹிடின் யாசின்

புத்ராஜெயா, பிப் 8 – கட்டாயம் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடு இன்றி, நாட்டின் எல்லையைத் திறக்கும் பரிந்துரைக்கு, தேசிய மீட்த் திட்ட மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை, அந்த மன்றத்தின் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர், அம்மன்றத்தின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்,

தனித்திருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படாவிட்டாலும், நாட்டிற்கு வருவதற்கு முன்பாகவும், வந்திறங்கிய பின்னரும் , எல்லை நுழைவாயிலில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென, டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

நாட்டை மீட்சியுறச் செய்ய, அனைத்துலக எல்லையை இடைப்பட்ட காலத்தில் திறப்பது அவசியமானதாக இருக்கிறது. எனினும், கோவிட் தாக்கத்தைப் பொறுத்தே நாட்டின் எல்லையைத் திறக்கும் எந்தவொரு முடிவும் திட்டமிட்டே எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!