Latestமலேசியா

மார்ச் 12-இல் ஜோகூர் மாநிலத் தேர்தல்

ஜோகூர் பாரு , பிப் 9 – ஜோகூர் மாநிலத் தேர்தல் மார்ச் 12- ஆம் தேதி நடைபெறுமென, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சாலே ( Abdul Ghani Salleh ) தெரிவித்தார்.

மேலும், பிப்ரவரி 26-ஆம் தேதி வேட்பாளர் நியமன நாளாக நியமிக்கப்பட்டிருப்பதாக, ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் , அம்மாநில தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகளை அவர் அறிவித்தார். ஜோகூர் மாநிலத் தேர்தலில் மொத்தம் 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு போட்டியிருக்கும் நிலையில் , அத்தேர்தலில் 25 லட்சத்து 97, 742 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், நாட்டில் முதல் முறையாக 18 வயதுடையவர்கள் வாக்களிக்கவிருக்கும் தேர்தலாகவும் அது திகழவிருக்கிறது. இதனிடையே, மலாக்கா, சரவாக் மாநில தேர்தல்களை அடுத்து நாட்டில் கடந்த 5 மாதங்களில் நடைபெறவிருக்கும் மூன்றாவது மாநிலத் தேர்தலாகவும், ஜோகூர் தேர்தல் விளங்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!