
வாஷிங்டன், மார்ச் 14 – நாளை மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி, பல்வேறு பிரிவுகளுக்கான விசா அனுமதிகளை சீனா, மீண்டும் வழங்கவிருக்கிறது.
அதோடு, ஹய்னான் தீவு உட்பட ( Hainan) பல்வேறு இடங்களுக்கான விசா கட்டுப்பாடுகளை அகற்றுவதோடு, ஷங்காய் ( Shanghai ) துறைமுகத்தை கடக்கும் பயண கப்பல்களுக்கான கட்டுப்பாடுகளையும் அந்நாடு அகற்றவுள்ளது.
மேலும், ஹங் காங்கில் (Hong Kong) இருந்தும் மாக்காவில் (Macao )இருந்தும் வரும் வெளிநாட்டவர்கள் , Guangdong-கிற்குள் விசா இன்றி நுழையும் அனுமதியையும் மீண்டும் சீனா வழங்கவிருக்கிறது.