
கோலாலம்பூர், மார்ச் 15 – மார்ச் 22 –ஆம் தேதி , புதன்கிழமை மாலையில், ரமலான் மாத தொடக்கத்தை குறிக்க , பிறை பார்க்கப்படுமென, அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.
பிறை பார்க்கப்பட்ட பின்னர் அன்றைய இரவு நோன்பின் தொடக்க தேதி குறித்த அறிவிப்பு வானொலி – தொலைக்காட்சிகளில் அரச முத்திரை காப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.