Latestமலேசியா

மார்ச் 26 ஜோகூரில் சிறப்பு விடுமுறை

ஜோகூர் பாரு, மார்ச் 9 – மார்ச் 26 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சிறப்பு விடுமுறையாக ஜோகூர் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
மார்ச் 23-ஆம் தேதி ஏற்கனவே, ஜோகூர் சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மாநிலத்தில் பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது .

இந்நிலையில், அன்றைய தினம் ரமலான் மாதம் தொடங்கினால் , மார்ச் 26- ஆம் தேதி சிறப்பு விடுமுறை வழங்க ஜோகூர் மாநில அரசாங்கம் இணங்கியிருப்பதாக , அம்மாநில அரசாங்க செயலாளர் டான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ( Tan Sri Dr. Azmi Rohani ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!