Latestமலேசியா

மாற்றுத்திறனாளி ஓட்டுனருக்கு காயம் விளைவித்த போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை – IGP

கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – மாற்றுத்திறனாளியான e-hailing ஓட்டுநரை தாக்கிக் காயப்படுத்திய போலீஸ்காரர் மீது உடனடியாக கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.

போலீஸ் படையின் நெறிமுறை மற்றும் தர நிர்ணய பின்பற்றல் துறை (JIPS) மேற்கொண்ட உள் விசாரணையின் முடிவில் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேசியப் போலீஸ் படையின் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Tan Sri Razarudin Husain) அதனை உறுதிப்படுத்தினார்.

கட்டொழுங்கு மீறலில் சிக்கும் போலீஸ்காரர்களுக்கு குற்றத்தின் அளவு மற்றும் தன்மையைப் பொருத்து எச்சரிக்கை, சம்பள உயர்வு நிறுத்தம், வேலையிலிருந்து இடைநீக்கம், பதவியிறக்கம் போன்ற தண்டனைகள் காத்திருப்பதாக அவர் சொன்னார்.

அத்தாக்குதல் சம்பவத்தில் போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து
பாதிக்கப்பட்ட நபரான Ong Ing Keong சார்பில் வழக்கறிஞர் N.சுரேந்திரன் கேட்டிருந்த கேள்வி தொடர்பில் IGP பதிலளித்தார்.

அச்சம்பவம் தொடர்பில் 12 பேரது வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டு, விசாரணை அறிக்கையும் சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

மே 28-ஆம் தேதி தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அத்தாக்குதலில் ஈடுபட்டவர், ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் பாதுகாப்புக்கு உடன் செல்லும் போலீஸ்காரர் எனக் கூறப்பட்டது.

அது குறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறு TMJ-வும் அப்போது கேட்டுக் கொண்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!