அலோர் காஜா, மே 10 – போலீசாரை கண்டதும் பீதியில் தப்பி ஓட முயன்ற “ஜோடியின்” கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.
நேற்றிரவு மணி 9.30 வாக்கில், மலாக்கா, பயா லெபார் ஆற்றில் அக்கார் கவிழ்ந்ததை, அலோர் காஜா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அசாரி அபு சாமா உறுதிப்படுத்தினார்.
மஸ்ஜித் தானா பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில், தனித்து இருந்த அந்த ஜோடி, போலீசாரின் வருகையை உணர்ந்ததும் “கல்வாட்” குற்றம் தொடர்பில், தாங்கள் கைதுச் செய்யப்படலாம் எனும் அச்சத்தில், அங்க்கிருந்து பாயா லெபார் வரையில் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு காரில் வேகமாக சென்று தப்பிக்க முயன்றுள்ளனர்.
சம்பவ இடத்தை அடைந்ததும், 30 வயது ஆடவன் செலுத்திய அக்கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலை, ஆற்றில் குடைச்சாய்ந்ததாக அசாரி சொன்னார்.
எனினும், அக்காரை சோதனையிட்டதில், அதில் கடத்தல் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதோடு, அவ்வாடவனுடன் காரில் இருந்த 26 வயது பெண் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார்.
அப்பெண் பின்னர், தெலுக் கொங்கிலுள்ள, அவரது உறவினரின் வீட்டிற்கு அனுபப்பட்ட வேளை ; அவ்வாடவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரில் பெண் ஒருவருடன் தனித்திருந்ததால் கைதுச் செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் தப்பி ஓட முயன்றதும் தெரிய வந்துள்ளது.
அதோடு, அவ்வாடவனுக்கு எதிராக மூன்று பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.