Latestஉலகம்

மாலியில் அல் கெய்டாவுடன் தொர்புள்ள தீவிரவாத தரப்பு தாக்குதல் நான்கு ரஷ்யர்கள் பலி

பமகோ, ஆக 16 – மாலியில் ரஷ்ய நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு பாதுகாவலர்களை கொன்றுவிட்தாக அல் கெய்டாவுடன் தொடர்புள்ள தீவிரவாத இயக்கம் ஒன்று கூறிக்கொண்டது. மத்திய மாலியில் மேற்கொண்ட தாக்குதலில் அவர்கள் மாண்டதாக அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மலைப்பகுதி வட்டாரத்திலுள்ள கிராமப் பகுதிக்குள் மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் அந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. நான்கு ரஷ்யர்கள் மாண்டதை மருத்துவமனை அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். மாலியில் ஆளும் ராணுவ அரசாங்கத்தை கிளர்ச்சிக் கும்பல் ஒன்று கடுமையாக எதிர்த்து வருகிறது. மாலியின் ராணுவ அரசாங்கத்திற்கு ரஷ்யா முழுமையான ஆதரவு வழங்கி வருவதால் ரஷ்ய பாதுகாவலர்களுக்கு எதிராக அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!