
பெந்தோங், ஜூன் 23 – ECRL-கிழக்கு கரை ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும், 16.39 கிலோமீட்டர் தூரம் கொண்ட கெந்திங் சுரங்கப் பாதையைத் தோண்டும் பணிகளை, இன்று பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
அந்த சுரங்கப் பாதையைத் தோண்டும் பணிகள் நிறைவடைய இரண்டரை ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகள் வரை ஆகலாம். அந்த பணிகள் நிறைவடையும்போது, தென்கிழக்காசியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப் பாதையாக அது திகழுமென பிரதமர் தெரிவித்தார்.
கெந்திங் சுரங்கப் பாதை ECRL திட்டத்தின் முக்கிய பகுதியாகும். குவந்தானில் இருந்து கிள்ளான் துறைமுகத்திற்கு சரக்குகள் ஏற்றிச் செல்வதற்காகன் முக்கிய பாதையாகவும் அது திகழவிருக்கின்றது.