வாஷிங்டன், ஆகஸ்ட் 30 – வாஷிங்டன், மிசூரி (Missouri) மாகாணத்தில் உள்ள தேசிய பூங்காவில் பறக்கமுடியாத நிலையில் வழுக்கைக் கழுகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
முதலில் அந்த கழுகு காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கழுகு ஆரோக்கியமாக இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அது அதிக குண்டாக அல்லது கொழுப்புகளுடன் இருப்பதே பறக்க முடியாத நிலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
Dickerson Park மிருகக்காட்சி சாலையில் எடுக்கப்பட்ட X-ray ஸ்கிரீனிங் சோதனையில், மிகப் பெரிய ரக்கூன் அதன் வயிற்றில் இருப்பது தெரிகிறது.
அந்த கழுகின் வயிற்றில் உணவு செரிமானமாகி வருவதைக் கூறி, உடல் நிலையைச் சீர் செய்து மீண்டும், அது பூங்காவிற்குள் விடப்பட்டது.