Latestமலேசியா

ஃபிரன்சாய்ஸ் உரிமை வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோருக்கு உதவ பெர்னாஸ் தயாராய் உள்ளது – டத்தோ ரமணன்

கோலாலம்பூர், பிப் 20 – ஃபிரன்சாய்ஸ் எனப்படும் உரிமை வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் தொழில் முனைவர்களுக்கு தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கும் Pernas எனப்படும் Perbadanan Nasional Bhd பல்வேறு உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு தயாராய் உள்ளது. ஃபிரான்சாய்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு பயிற்சிகள், நிதியுதவிகள் மற்றும் ஆலோசனைகளையும் பெர்னாஸ் வழங்கி வருகிறது. நாடு முழுவதிலும் 5,000 ஃபிரான்சைஸ் தொழில் முனைவர்களை உருவாக்கும் இலக்கை பெர்னாஸ் கொண்டுள்ளதால் இந்த வாய்ப்புக்களை சிறிய, நடுத்தர தொழில் துறையில் ஈடுபடுவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தொழில்முனைவர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

2000 ஆம் ஆண்டிலிருந்து 5,900 ஃபிரன்சாய்ஸ் தொழில் முனைவர்களை பெர்னாஸ் உருவாக்கியிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி 35,000 வேலை வாய்ப்புக்களையும் அந்த நிறுவனம் உருவாக்கியிருப்பதாகவும் ரமணன் தெரிவித்தார். இந்த காலக்கட்டத்தில் 709 மில்லியன் ரிங்கிட் முதலீடுகளையும் பெர்னாஸ் பதிவு செய்துள்ளது. ஃபிரன்சாய்ஸ் வர்த்தக தொழில்துறையில் ஈடுபடவிரும்பும் மலேசியர்களுக்கு இன பாகுபாடு இன்றி உதவுவதற்கு பெர்னாஸ் முன்வந்துள்ளதால் இந்திய தொழில் முனைவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ரமணன் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!