
புத்ராஜெயா, செப் 19 – இந்திய சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவின், சிறப்பு செயற்குழுவில் உறுப்பினர்களாக இருந்த செனட்டர் டத்தோ சிவராஜ் மற்றும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் ஆகியோர் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அப்பிரிவின் நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
சிவராஜ் ம.இ.கா-விலிலிருந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக அச்சிறப்பு செயற்குழுவில் அக்கட்சியின் சார்பில் செனட்டர் டத்தோ நெல்சன் நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியப்படுகிறது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமால் அறிவிக்கப்பட்ட அச்சிறப்பு செயற்குழுவின் தலைவராக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் இருந்து வரும் நிலையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் மற்றும் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுவனேஸ்வரன் ஆகியோர் உறுப்பியம் பெற்றுள்ளனர்.