மித்ரா நிதி முறைகேடு சம்பந்தப்பட்டோர் மீது விரைவில் குற்றச்சாட்டு – அசாம் பாக்கி
கோலாலம்பூர், பிப் 8 – மித்ரா நிதியை தவறாக கையாண்டதன் தொடர்பில் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக 10 விசாரணை அறிக்கைகள் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குழுவிடம் MACC சமர்ப்பித்துள்ளது. MACC யின் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆதாரங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகளை ஆராயவிருப்பதால் அவருக்காக தாம் காத்திருப்பதாக MACCயின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார்.
மித்ரா நிதி முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விரைவில் குற்றஞ்சாட்டு கொண்டு வரப்படும் என நாங்கள் நம்புகிறோம். அதே வேளையில் மித்ராவின் நிதி முறைகேட்டில் அதிகமானோர் சம்பந்தப்பட்டிருப்பதால் மேலும் பலர் அடையாளம் காண்பதற்காக விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அஸாம் பாக்கி தெரிவித்தார். சீனப் புத்தாண்டு விடுமுறை காலத்திற்கு முன்னதாகவே நாங்கள் விசாரணையை மேற்கொண்டோம். அடுத்து சாட்சிகளை நிறுத்துவதற்காக நாங்கள் சற்று வேகமாக களம் இறங்க வேண்டியிப்பதாக அவர் விவரித்தார்.
மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் கடந்த ஆண்டு 10 நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பற்ற இயங்களைச் சேர்த்த 18 பேர் கைது செய்யப்பட்டனர். மித்ரா நிதி முறைகேடு தொடர்பில் மேலும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த மற்றொரு 22 தனிப்பட்ட நபர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். 2019 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை 337 நிறுவனங்கள் ,சங்கங்கள் மற்றும் அரசு சார்ப்ற்ற இயக்கங்களுக்கு 203 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகையை மித்ரா அங்கீகரித்தது.