Latestமலேசியா

மித்ரா நிதி மோசடி ; உயர்நெறி கழகத் தலைவர் , முன்னாள் செயலாளர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – ஒரு லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான மித்ரா -இந்தியர் சமூக உருமாற்றத் திட்டப் பிரிவின் நிதியை மோசடி செய்ததாக , தேசிய உயர்நெறி கழகத்தின் தலைவர், அக்கழகத்தின் முன்னாள் செயலாளர் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டன.

கோலாலம்பூர், சேஷன் நீதிமன்றத்தில் , 40 வயது Sheikh Weshal Sheikh Ahmad, 57 வயது வீ. குணசேகரன் மீது அந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

Weshal , குணசேகரன் இருவரும் தலா 16 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அவ்விருவரும் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியிருக்கின்றனர்.

அவ்விருவரும் முறையே 25,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும் , ஒரு நபர் உத்தரவாதத்திலும் விடுவிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!