Latestமலேசியா

மித்ரா நிதி மோசடி ; நிறுவன இயக்குநர் மீது 6 குற்றச்சாட்டுகள்

ஈப்போ, பிப் 18 – 51 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டை உட்படுத்திய மித்ரா நிதியை நம்பிக்கை மோசடி செய்ததன் தொடர்பில் , நிறுவன இயக்குநர் மீது, ஈப்போ செஷன் நீதிமன்றத்தில் 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும் தம் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் 52 வயதான டத்தோ எல்.ரகு ராமன் மறுத்துள்ளார். அவரை நீதிமன்றம் 50,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க அனுமதித்ததோடு, வழக்கு ஏப்ரல் 21-ஆம் தேதி செவிமடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில் மித்ரா நிதி மோசடி தொடர்பில், நாட்டின் 7 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 22 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!