நியு யோர்க், பிப் 3 – மின்சாரத்தில் இயங்கக் கூடிய உலகின் முதல் பயணிகள் விமானம் பறப்பதற்கு தயாராகியுள்ளது. இஸ்ரேலிய நிறுவனமான Eviation தயாரித்திருக்கும் Alice என பெயரிடப்பட்டிருக்கும் அந்த விமானம், கடந்த வாரம் இயந்திர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மின்சார கார் அல்லது கைபேசியின் மின்கலத்தை மின்னூட்டுவது போல், 30 நிமிடம் மின்னூட்டுவதின் வாயிலாக Alice, ஒரு மணி நேரத்திற்கு பயணிக்க முடியுமென அந்நிறுவனம் கூறியுள்ளது.