Latestமலேசியா

மின்சாரம் பாய்ந்து UUM பல்கலைக்கழக மாணவி விநோசினி பலி-பெற்றோர் வேதனை!

கிள்ளான், மே 23 – இரு தினங்களுக்கு முன்பு, உடலில் மின்சாரம் பாய்ந்து UUM -வட மலேசிய பல்கலைக்கழக மாணவியான விநோசினி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அம்மாணவையின் குடும்பத்தார், அப்பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் சக நண்பர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கும் வேதனைக்கு உட்படுத்தியிருக்கிறது.

அந்த மாணவி இறப்பு தொடர்பில் இன்னும் போலீஸ் விசாரணை தொடர்கின்றது.

படிப்பில் மிகவும் கெட்டிகாரியான தங்களது மகளின் இறப்புக்கு, உடலில் பாய்ந்த மின்சாரமே காரணமென கூறப்படும் நிலையில் , அந்த மின்சாரம் எங்கிருந்து பாய்ந்தது என்ற உண்மை தங்களுக்கு தெரிய வேண்டுமென, விநோசினியின் தந்தை சிவக்குமார் வலியுறுத்தியிருக்கின்றார் .

அந்த துயரச் சம்பவத்துக்கு காரணம் தனது மகள் பயன்படுத்திய மின்சார பொருட்களா? அல்லது பல்கலைக்கழக கட்டட மின்சார முறையினாலா என தனக்கு தெரிய வேண்டுமென, வணக்கம் மலேசியா அவரை தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

சம்பவத்தன்று, கணக்கியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவியான விநோசினி, பல்கலைக்கழக தங்குமிட அறையில், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அந்த மாணவி, இறக்கும் சமயத்தில் மடிக்கணினியை பயன்படுத்தியவாறு காதுகளில் Airpods கருவிகளையும் பொருத்தியிருந்தார்.

இந்நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் , உட்புறமான பகுதியில் இருப்பதால், பல்கலைக்கழக வளாகத்தில் அடிக்கடி , மின் கோளாறினால் மின் துண்டிப்பு ஏற்படும் என கூறியிருந்தார்.

இதை கருத்தில் கொண்டு, உயர் மின்னாற்றல் தொடர்பான கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பில், பல்கலைக்கழக தரப்பு அவ்வப்போது எச்சரிக்கை மட்டுமே வழங்கி வந்தது என்றும் அதனை நிரந்தரமாக சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் செய்யப்படவில்லை எனும் பேச்சு சக மாணவர்கள் மத்தியில் பேசுப் பொருளாக நிலவியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான், Bandar Puteri-பகுதியைச் சேர்ந்த, குடும்பத்தின் மூன்றாவது பிள்ளையான விநோசினியின் நல்லுடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!