கோலாலம்பூர், நவம்பர்-27 – சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் அனைத்து மாவட்டங்களிலும், மின்சார வாகனங்களை வேகமாக charge செய்யும் நிலையங்கள் அமைக்கப்படுவதை உறுதிச் செய்ய, MITI எனப்படும் முதலீடு-வாணிபம்-தொழில்துறை அமைச்சு அவ்விரு மாநில அரசுகளுடன் ஒத்துழைத்து வருகிறது.
2025 வாக்கில் நாடு முழுவதும் 1,500 charge நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற MITI-யின் இலக்குக்கு ஏற்ப, அந்த முன்னோடித் திட்டம் அமைவதாக துணையமைச்சர் லியூ ச்சின் தோங் (Liew Chin Tong) தெரிவித்தார்.
அத்திட்டம் பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
தற்போது வரை, நாடு முழுவதும் 5,000 EV சாதாரண charge நிலையங்களும், 500 வேகமாக charge ஏற்றும் நிலையங்களும் உள்ளதாக ச்சின் தோங் சொன்னார்.
அமைச்சின் அசல் இலக்கு 10,000 charge நிலையங்களை அமைப்பது.
ஆனால், உண்மையில் எத்தனை நிலையங்கள் என்பது முக்கியமல்ல; அவற்றில் எத்தனை நிலையங்களில் வேகமாக charge செய்ய முடியும் என்பதே முக்கியம் என்றார் அவர்.
உள்ளூர் தொழில் துறையினர் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதை அதிகரிக்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, துணையமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.