
கோலாலம்பூர், நவ 7 – தீபாவளியை முன்னிட்டு ஆர்.டி.எம் விஸ்மா ரேடியோவில் மின்னலின் சர்க்கரை தீபாவளி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நேற்று மதியம் 12 மணியளவில் சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆடல் , பாடல், ஆகிய அங்கங்களுடன் சிறப்பு அம்சமாக பெட்டாலிங் ஜெயா சரஸ்வதி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த வசதிக் குறைந்த 20 மாணவர்களுக்கு ரொக்கம் மற்றும் உதவிப் பொருட்களுடன் தீபாவளி பாரம்பரிய உடைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மின்னல் அறிவிப்பாளர்களின் படைப்புகளுடன் தவில் , நாதஸ்வரம் இசையும், விஹாரா நடனக் குழுவைச் சேர்ந்த கலைஞர்களின் நடனமும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்துகொண்ட ஆர்.டி.எம்மின் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவின் இயக்குனர் ஷஹ்ரி பின் சரிபன் நினைவுச் சின்னங்கள் மற்றும் மாணவர்களுக்கான உதவிப் பொருட்களையும் வழங்கினார்.