
ஈப்போ, அக்டோபர் 3 – மின்னியல் தொழிற்சாலையில், நிராகரிக்கப்பட்ட “சிப்புகளை” கொள்ளையடித்த குற்றச்சாட்டை மறுத்து, ஐந்து நண்பர்கள் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோரினர்.
40 வயது முஹமட் நிசாம் அப்துல் ரஹிம், 46 வயது ஜுனைடி அலி, 42 வயது முஹமட் ரொசாய்டி யூசோப், 32 வயது ரிடுவான் முஹமட் யூசோப், 47 வயது சைரூல் நிசாம் முஹமட் சசாலி ஆகியோருக்கு எதிராக இன்று குற்றம்சாட்டப்பட்டது.
செப்டம்பர் 14-ஆம் தேதி, இரவு மணி 8.45 வாக்கில், ஜாலான் லாபாங்கான் தெர்பாங்கிலுள்ள, Carsem எனும் தொழிற்சாலையில், அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அந்நால்வரும் தலா நான்காயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை நவம்பர் 15-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, மின்னியல் தொழிற்சாலை ஒன்றில் கொள்ளையிட்ட அறுவர், கடந்த மாதம் ஈப்போ உட்பட பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் இருந்து கைதுச் செய்யப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்ட வேளை ; அதில் ஒருவன் அந்நிய நாட்டு ஆடவன் ஆவான்.