Latestமலேசியா

மின் கட்டணத்தை உயர்த்தினால் உதவித் தொகையால் பயன் இல்லை பக்காத்தான் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 23 – மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் எந்தவொரு பயனும் இல்லையென பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அரசாங்கத்திற்கு நினைவுறுத்தியுள்ளனர். அடுத்த மாதம் பயனீட்டாளர்களுக்கான மின்சார கட்டணத்தை உயர்த்தும் Tenaga Nasional-லின் திட்டத்தை பிரதமர் Ismail Sabri Yaakob தடுக்க வேண்டும் என DAP தலைவர் Lim Guan Eng கேட்டுக்கொண்டார். 2021 ஆம் ஆண்டு 3.66 பில்லியன் ரிங்கிட்டையும் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு 3.59 பில்லியன் ரிங்கிட்டையும் நிகர லாபமாக TNB பெற்றுள்ளது. அப்படியிருக்கும்போது எரிவாயு மற்றும் நிலக்கரி உயர்வினால் மின் கட்டணத்தை உயர்த்துவதாக TNB கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லையென லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.

மக்களின் வாழ்க்கை செலவினம் உயர்ந்துள்ள இவ்வேளையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை அமனா கட்சியின் துணைத்தலைவர் Salahuddin Ayub-பும் சாடினார். உணவுப் பொருள் விலை நெருக்கடிக்கு தீர்வு காணும்வரை மின் கட்டண உயர்வை ஒத்திவைக்கும்படி அவர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!