Latestஉலகம்

மியன்மாரில் ராணுவத்துக்கு அஞ்சி சொந்த பிள்ளைகளுடன் உறவை முறித்துக் கொள்ளும் பெற்றோர்

நய்பிடாவ், பிப் 7 – மியன்மாரில் ஆளும் ராணுவ அரசாங்கத்திற்கு எதிராக பொதுவில் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தங்களது மகன், மகள், மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் குடும்பங்கள் உறவை துண்டித்துக் கொண்டுள்ளன.
அவ்வாறு உறவைத் துண்டித்துக் கொள்வதாக கடந்த 3 மாதங்களில் தினசரி சராசரி 6 அல்லது 7 குடும்பங்கள், அரசாங்கத்துக்கு சொந்தமான பத்திரிக்கைகளில் அறிவிப்பு செய்கின்றன.

ராணுவ அரசாங்கம், தங்களை எதிர்க்கும் தரப்பினர் அல்லது அத்தகையோருக்கு அடைக்கலம் தரும் தரப்பினரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையடுத்து, கடந்த நவம்பர் தொடங்கி சொந்தங்களின் உறவை முறித்துக் கொள்ளும் அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் அதிகரித்துள்ளன.

அவ்வாறு தனது பெற்றோரால் உறவு முறித்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவர் Lin Lin Bo Bo.
Lin Lin Bo Bo , எங்களது பேச்சை கேட்டு நடந்துக் கொள்ளவில்லை என அவரது பெற்றோர் பத்திரிக்கையில் அறிவிப்பு கொடுத்திருந்தனர். அந்த அறிவிப்பைக் கண்டு தாம் அழுந்தததாக Lin Lin Bo Bo , ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!