Latestஇந்தியாஉலகம்

துவாரகை கடலில் நீராடி, வழிபட்டார் மோடி

புதுடெல்லி, பிப்ரவரி 26 – இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்திலுள்ள, துவாரகதீஷ் கோவிலில், ஆழமான நீரில் மூழ்கி தெய்வீக தரிசனம் செய்தார்.

“நீரில் மூழ்கி இருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது, மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பழங்கால சகாப்தத்துடன் தாம் இணைந்திருப்பதை போல உணர்ந்ததாகவும், பகான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மை ஆசிர்வதிப்பார் எனவும் மோடி தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, குஜராத்தில் அமைந்துள்ள, அந்நாட்டின் மிக நீளமான “சுதர்ஷன் சேது” பாலத்தை மோடி அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ஓகா மற்றும் பெய்ட் துவரகா தீவை இணைக்கும் “சுதர்ஷன் சேது” பாலம், 979 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 2.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட அப்பாலத்திற்கு, 2017-ஆம் ஆண்டு மோடி அடிக்கல் நாட்டினார்.

சுதர்சன் சேது பாலம் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாலத்தின் நடைபாதை பகவத் கீதையின் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்கள் உள்ளன.

நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!