குவா மூசாங், மே 9 – குவா மூசாங் Ladang Teroka Tuah Sdn Bhd , Aring 8- இல் வேலை செய்து வந்த பால் வெட்டு தொழிலாளளியான மியன்மார் பெண் ஒருவரை யானை தாக்கியதால் அவர் காயம் அடைந்தார். அந்த சம்பவம் குறித்து நேற்றிரவு 10 மணியளவில் தகவல் கிடைத்தாக கிளந்தான் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா பாதுகாப்பு துறையின் இயக்குநர் Mohamad Hafid Rohani கூறினார். வனவிலங்கினால் தாக்கப்பட்டதால் ரப்பர் தோட்ட தொழிலாளர் ஒருவர் காயத்திற்கு உள்ளானதாக தோட்ட அதிகாரியிடமிருந்து தகவல் பெற்றதாக குவா மூசாங்கிலுள்ள பெர்ஹிலித்தானுக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் அந்த தோட்டத்தின் தொழிலாளியுமான ஆடவர் அதிகாரிகளை அழைத்துச சென்றதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Mohamad Hafid தெரிவித்தார். இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து வனவிலங்கு தாக்கப்பட்டது தொடர்பில் Ladang Teroka Tuah Sdn Bhd அதிகாரிகளிடமிருந்து வனவிலங்குத்துறையினர் எந்தவொரு புகாரையும் பெறவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 2ஆம தேதி Tanah Tinggi Lojing , Ladang Sindiyan- னில் ஆடவர் ஒருவர் இறந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம்தேதி Ladang Usaha Padu வில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் இந்தோனேசிய ஆடவர் மரணம் அடைந்துள்ளார். வனவிலங்குகளை எதிர்நோக்கும்போது மிகவும் கவனமாக செயல்படும்படி மக்களை Mohamad Hafid கேட்டுக்கொண்டார்.