
கோலாலம்பூர், மார்ச் 14 – 1 லட்சத்து 50,000 ரிங்கிட் பணத்தை மிரட்டி கேட்டதாக செய்யப்பட்ட புகார் தொடர்பில், ஐந்து போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, தன்னிடமிருந்து சில போலீஸ் அதிகாரிகள் மிரட்டி பணம் கேட்டதாக, உள்நாட்டு ஆடவரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசேன் ஓமார் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்தார்.
அந்த புகார் பெற்ற அன்றைய தினமே, இன்ஸ்பெக்டர், சார்ஜன் (sergeant ), கார்ப்பரல் ( corporal ), கான்ஸ்டபல் ( constable) தகுதி கொண்ட ஐந்து போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இதனிடையே , புகார் கொடுத்த நபருக்கு , மோசடி குற்றச் செயலுடன் தொடர்பிருக்கலாமெனும் சந்தேகத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.