Latestமலேசியா

சீன புதுக் கிராமங்களை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கும் திட்டத்தை இனப் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் ; சிலாங்கூர் MB நினைவுறுத்தல்

கோலாலம்பூர், பிப்ரவரி 7 – சிலாங்கூரிலுள்ள, சீன புதுக்கிராமங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் எனும் அந்தஸ்துக்கு பரிந்துரைக்கப்பட்டதை இனப் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

அது போன்ற செயல் யாருக்கும் எந்த நன்மையையும் கொண்டு வராது. மாறாக, பல்லின மக்களிடையே காணப்படும் நல்லிணக்கத்தை அது சீர்குலைத்து விடும் என அமிருடின் சொன்னார்.

அந்த திட்டம் இன்னும் பரிந்துரை நிலையில் தான் உள்ளது. அனைத்து விண்ணப்பங்களையும் நன்கு ஆராய்ந்த பின்னர், நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த கிராமங்கள் இருந்தால், அவை கட்டாயம் அரசாங்க பதிவேட்டில் இடம் பெறச் செய்வோம் என அமிருடின் கூறியுள்ளார்.

அதுபோன்ற நடவடிக்கைகள் வெகு காலத்திற்கு முன்பிருந்தே மேற்கொள்ளப்பட்டு வரும் போதும், இப்பொழுது வெறும் குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக, பொறுப்பற்ற சில தரப்பினர் அதனை அரசியலாக்க முயல்வதாக, அமிருடின் சாடினார்.

சிலாங்கூரிலுள்ள, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சீன புதுக்கிராமங்களை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கும் நடவடிக்கை குறித்து, பெரிகாத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் பைசால் வான் அஹ்மாட் கமால் எழுப்பியிருந்த கேள்விக்கு, அமிருடின் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, சிலாங்கூரில், கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன புதுக்கிராமங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக பரிந்துரைக்கப்படுமென, வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ஙா கொர் மிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!