கோலாலம்பூர், பிப் 9 – நாட்டில் புதிய கோவிட் தொற்று எண்ணிக்கை 17, 134 -ஆக அதிகரித்தது.
நேற்று அந்த எண்ணிக்கை 13, 944 –ஆக பதிவாகிய வேளை, புதிய தொற்று 24 மணி நேரத்தில் மூவாயிரத்திற்கும் கூடுதலாக அதிகரித்திருப்பதாக, சுகாதா தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
புதிதாக பதிவான கோவிட் தொற்று சம்பவங்களில் 99. 5 விழுக்காடு சம்பவங்கள் லேசான அறிகுறிகளைக் கொண்ட முதல், இரண்டாம் பிரிவுகளைச் சேர்ந்தவை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.