கியூசன், மார்ச் 4 – பிலிப்பீன்ஸ் கியுசோன் நகரில் (Quezon) சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு, உளவியல் ரீதியாக ஆதரவு தரும் பிராணிகளாகவும், வெடிமருந்துகளை மோப்பம் பிடிக்கும் நாய்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கின்றன.
கால்நடை துறை அந்த பயிற்சியினை மேற்கொள்ளுமென , அந்நகரின் மேயர் ஜாய் பெல்மான்டே ( Joy Belmonte ) தெரிவித்திருக்கின்றார்.
கியுசன் நகரில், நாள்தோறும் உரிமையாளர்கள் கைவிடும் நாய்கள் உட்பட சராசரி 57 தெருநாய்கள் மீட்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.