Latestமலேசியா

மீண்டும் அதிகரித்தது கோவிட் தொற்று ; 6,849 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், ஜூன் 11- நாட்டில் கோவிட் தொற்று சம்பவங்கள் மீண்டும் அதிகரித்திருக்கின்றன.  கடந்த 24 மணி நேரத்தில்  6,849 புதிய கோவிட்  தொற்று சம்பவங்கள்  பதிவாகியதாக  சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அந்த புதிய எண்ணிக்கையில், சிலாங்கூரில்  2,558 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கோலாலம்பூரில்  884 பேரும், சரவாக்கில் 699 பேரும், நெகிரி செம்பிலானில் 685 பேரும்,  ஜோகூரில்  426 பேரும் தொற்றுக்கு உள்ளாகினர்.

இதனிடையே, நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 949 பேர் கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாக , சுகாதார அமைச்சு  தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!