
நியு யோர்க், ஜன 16 – கடந்தாண்டு ஜூனில் விபத்தில் சிக்கி காயமடைந்ததை அடுத்து நீண்ட ஓய்வில் இருந்த தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை சிவசங்கரி , மீண்டும் களத்திற்கு திரும்பியிருக்கின்றார்.
தமது மேற்படிப்பைத் தொடர்வதற்காக அமெரிக்கா, நியுயோர்க்கிலுள்ள Cornell பல்கலைக்கழகத்துக்குத் திரும்பியிருக்கும் சிவசங்கரி, இவ்வாண்டின் முதல் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்றார். மீண்டு களத்திற்குத் திரும்பியிருப்பது தமக்கு மிகவும் உணர்ச்சிப் பூர்வமான ஒரு தருணம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
முன்னதாக சிவசங்கரி, கடந்தாண்டு மார்ச்சில் Cornell பல்கலைக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, அப்பல்கலைகழகத்தின் அங்கீகார மோதிரத்தைப் பரிசாகப் பெற்றார்.சிவசங்கரி இவ்வாண்டு மே மாதம் தனது இளங்கலை பட்டத்துக்கான மேற்படிப்பை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.