
கோலாலம்பூர், மார்ச் 15 – கோவிட்டுக்கு முந்திய கால கட்டத்தில் இருந்ததை போன்று, புதிய பள்ளிக்கூட தவணையை மீண்டும் ஜனவரிக்கே கொண்டு வர, கல்வியமைச்சு இன்னும் உத்தேசிக்கவில்லை.
நாட்டில் கோவிட் -19 பெருந்தொற்று பரவியதை அடுத்து, புதிய பள்ளித் தவணை, மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரும் முடிவு , பொருளாதாரம், ஆண்டு இறுதியில் ஏற்படும் வெள்ளம், தேர்வு அட்டவணை போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்குமென கல்வி தலைமை இயக்குநர் Pkharuddin Ghazali தெரிவித்தார்.