மலேசியா

மீண்டும் நெடுஞ்சாலைக்குள் புகுந்த மாடு; இம்முறை ஒரு உயிரே போனது

சுங்கை பூலோ,ஜூன்-18, Jalan Duta டோல் சாவடியில் இருந்து சுங்கை பூலோ நோக்கிச் செல்லும்
வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 24.9-வது கிலோ மீட்டரில் காரொன்று மாட்டை மோதி விபத்துக்குள்ளானதில் வியாபாரி உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 4.55 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் 30 வயது அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவத்தின் போது நெடுஞ்சாலையின் ஆக வலப்புற பாதையில் அவர் போய்க் கொண்டிருந்தார்.

அப்போது அதே பாதையில் இருந்த மாட்டுடன் மோதி தடம் புரண்ட கார் சாலைத் தடுப்பில் மோதி நின்றது.

தலையில் பலத்த காயம் அடைந்த காரோட்டி அங்கேயே மரணமுற்றார்; காரால் மோதப்பட்ட மாடும் சாலை நடுவே செத்துப் போனது.

அச்சம்பவம் 1987-ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக போலீஸ் கூறியது.

அங்கு மாடுகள் நெடுஞ்சாலைக்குள் நுழைந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாவது, கடந்த 2 நாட்களில் இது இரண்டாவது சம்பவமாகும்.

2 நாட்களுக்கு முன்னர் Paradigm Mall அருகே LDP நெடுஞ்சாலையில் 2 மாடுகள் புகுந்து ஓடியதில் ஒரு கார் விபத்துக்குள்ளானது.

எனினும் அதில் காரோட்டிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!