
வாஷிங்டன், மார்ச் 15 – Facebook -கின் Meta நிறுவனம், மேலும் ஒரு சுற்றில், புதிதாக 10,000 பேரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
இந்த முடிவு கடினமானது ; இதனால் திறமையான ஆர்வமுள்ள பல தொழிலாளர்களை இழக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த முடிவு எடுப்பதை விட நிறுவனத்துக்கு வேறு தேர்வு இல்லையென Meta நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி Mark Zuckerberg தெரிவித்தார்.
இந்த வேலை நிறுத்த முடிவால் முதலில் பாதிக்கப்படுபவர்களாக, ஆட்களை வேலைக்கு சேர்க்கும் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பர். அடுத்துவரும் மாதங்களில் தொழில்நுட்ப – வர்த்தக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேலை இழப்பார்கள் என Meta நிறுவனம் கூறியுள்ளது.