Latestஉலகம்

மீன் பிடிக்கச் சென்றவரின் படகை ராட்சத சுறா தாக்கியது

பெர்த், ஏப் 22- தமது மனைவி மற்றும் 14 வயது மகனுடன் உல்லாசமாக மீன் பிடிக்கச் சென்ற ஆடவர் ஒருவரின் படகை இராட்சத வெள்ளை சுறா மீன் ஒன்று தாக்கியது. பெர்த்தின் தென் பகுதியிலுள்ள கடலில் தமக்கு ஏற்பட்ட அந்த பயங்கரமான அனுபவத்தில் அந்த படகில் இருந்த தாமும் குடும்ப உறுப்பினர்களும் பெரும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்ததாக David Tuckfield என்ற ஆடவர் தெரிவித்தார். அந்த சுறா தமது படகிற்கு அருகிலேயே தொடர்ந்து வந்ததோடு ஒரு கட்டத்தில் கூர்மையான பற்களைக் கொண்ட தனது வாயை முடிந்தவரை திறந்து படகை கடிக்க முயன்றது. 4 மீட்டர் நீளம் கொண்ட அந்த சுறா மீன் அரை மணி நேரம் தமது படகையே சுற்றி வந்ததாகவும் David Tuckfield கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!