Latestஉலகம்

மீம்ஸ்களின் நாயகன் ‘ கபோசுவிற்கு’ லுகேமியா பாதிப்பு ; வருத்தத்துடன் தெரிவித்த உரிமையாளர்

தொக்யோ, டிச 29 – இணையத்தில் மக்களை சிரிக்க வைத்து வரும் மீம்ஸ்களின் நாயகன் ‘கபோசு’ (Kabosu) செல்லப் பிராணி, லுகேமியா – ரத்தப் புற்றுநோயாலும், கல்லீரல் பாதிப்பாலும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார். 17 வயதாகும் கபோசு , உண்பதை நிறுத்திக் கொண்டிருப்பதுடன், எழுந்து நடமாடுவதும் குறைந்திருப்பதாக அதன் உரிமையாளர் Atsuko Sato, தமது இன்ஸ்தாகிராம் பதிவின் மூலம் தெரிவித்திருக்கிறார். தனது இரு கால்களையும் மடித்து வைத்துக் கொண்டு, ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையிலான முகப் பாவனையைக் காண்பிக்கும் கபோசுவின் புகைப்படம் 2010- இணையத்தில் பரவலாகி, மீம்ஸ்களில் இன்றியமையாத ஒரு படமாக மாறியது. கபோசுவின் புகழ் அதிகரிக்க, அதன் வைரலான புகைப்படம் , பிட்கோய்னுக்கு மாற்றாக அறிமுகமான ‘Dogecoin’ -இலக்கவியல் நாணயத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!